இலங்கையின்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய பிரதித் துாதுவரும் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர்

பார்வையிட்டதன் நோக்கம் எதுவும் கூறப்படவில்லை
பதிப்பு: 2018 செப். 04 16:02
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 18:08
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் சீன அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவர் டிம்பேர்ன் (Tom Burn) தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட குழவினர் அம்பாந்தோட்டைத் துறைமகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தற்போது நிர்வகிக்கும் இலங்கை, சீன அதிகாரிகள் பிரித்தானியாவின் பிரதித் தூதுவரையும் அவருடன் சென்ற குழுவினரையும் வரவேற்று உரையாடியுள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
 
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பயன்பாடுகள் மற்றும் துறைமுக அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பார்வையிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைதது நாடுகளின் பயன்பாடிற்கும் ஏற்ற முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருந்தார்.

சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுளுக்கு இலங்கையின் கடல்வளம் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்த மைத்திரி- ரணில் அரசாங்கம் அனுமதியளித்தமை, இலங்கைத் தீவின் இறைமைக்கு பெரும் ஆபத்து--ஜே.வி.பி

இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரித்தானியத் துாதரகத்தின் பிரதித் துாதுவர் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஆனால் துறைமுகத்தைச் சென்று பார்வையிட்டதன் நோக்கம் எதுவும் அந்த அறிக்கையில் கூறப்பட்வில்லை.

கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஆகிய இருவரும் இருவார இடைவெளியில் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர்.

திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ச்சுனா ரணதுங்க திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆய்வை மேற்கொள்வதற்காக பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் சென்ற சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

சீனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு இந்தியா, ஜப்பான், பிரித்தானியா. அமெரிக்கா போன்ற நாடுள் இணைந்து இலங்கையின் கடல்வளம் மற்றும் துறைமுகங்களை பயன்படுத்தும் நோக்கில் மைத்தரி- ரணில் அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.

அதேவேளை, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களைக் கூறும் போடுவதற்கும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதற்கு ஏற்ற முறையிலும் கடல் வளங்களையும் துறைமுகங்களையும் எண்ணை வயல் ஆய்வு என்ற பெயரில் கைளித்து வருகின்றது.

இது ஈழத் தமிழர்ளின் இறைமைக்கு பெரும் ஆபத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுளுக்கு இலங்கையின் கடல்வளம் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்த மைத்திரி- ரணில் அரசாங்கம் அனுமதியளித்தமை, இலங்கைத் தீவின் இறைமைக்கு பெரும் ஆபத்து என ஜே.வி.பி உறுப்பினர் ஹந்து நெத்தி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.