சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை
பதிப்பு: 2018 செப். 21 13:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 22:09
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
 
மைத்திரி- ரணில் அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் எட்டாவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவாக கொழும்பு வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள். பொதுமக்கள் என பலரும் பங்குபற்றினர்.

அனுராதபுரம் உள்ளிட்ட தென்பகுதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்புகள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தன.

இதேவேளை. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை எதுவும் கூறவில்லையென கொழும்புச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.