கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு தெய்லாமுனை பிரதேசத்தில் செங்கல் உற்பத்தி பாதிப்பு- பலர் தொழிலை இழந்தனர்

இலங்கை அரசாங்கம் ஊக்குவிப்பு இல்லையென குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 செப். 21 19:56
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 16:35
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசின் ஊக்குவிப்பு மற்றும் கடனுதவிகள் இல்லாமையினால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் விற்பனையாளர்களினால் பருவகாலத் தொழிலாக செய்யப்பட்டு வரும் செங்கல் உற்பத்தி முற்றாகவே தடைப்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர் சி. ரவிந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தெய்லாமுனை பகுதியில் இடம்பெறும் செங்கல் உற்பத்தியாளர்கள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். செங்கல் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு மூலம்பொருட்கள் உட்பட இடைநிலைப் பொருட்கள் அனைத்துக்கும் கூலி கொடுத்துச் செய்யப்படுகின்றது.
 
ஆனால், கல்லுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. இதனால், செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பலர் இன்று தொழிலை இழந்துள்ளனர்.

செங்கல் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு மூலம்பொருட்கள் உட்பட இடைநிலைப் பொருட்கள் அனைத்துக்கும் கூலி கொடுத்துச் செய்யப்படுகின்றது.

ஆனால், கல்லுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. இதனால், செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பலர் இன்று தொழிலை இழந்து தொழிலின்றி தவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் மாவட்ட மக்களினால் பயன்படுத்தப்படுமானால், அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் சுயதொழிலாக செய்கைபண்ணடும் செங்கல் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.

ஆனால், அதற்கான ஊக்குவிப்புகள் எதுவும் பிரதேச செயலகத்தினாலே அல்லது வேறு அரசு நிறுவனங்களினாலே செய்யப்படுவதில்லை. இதனால் தொழில் பாதிப்படைவதுடன், பொருளாதார ரீதியாகவும் பெரும் பின்னடைவை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் செங்கல் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவு தொகைகளை வழங்கினாலும், சந்தைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலினால் மேலும் முன்னேற முடியாமல் உள்ளதாகவும் ரவிந்திரன் தெரிவித்தார்.

எனவே, எமது செங்கல் உற்பத்திக்கு அமைப்பு ஒன்று இருப்பது போன்று, செங்கல் விற்பனைக்கும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுமானால், எமது உற்பத்திப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் அதிகவருமானத்தைப் பெறவும் முடியும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய அக்கறை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்திகளை குறிப்பாக சிறு கைத்தொழில் உற்பத்திகளை ஊக்குவிக்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையென சிறுகைத் தொழில் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.