இலங்கை அரசியல் நெருக்கடியில் மற்றுமொரு முரண்நிலை?

பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார் மஹிந்த ராஜபக்ச - 45 பேர் இணைவு

தலைமைப் பதவியையும் ஏற்பார் - நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம்
பதிப்பு: 2018 நவ. 11 15:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 00:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்த மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியில் அவர் இணைந்துள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையில் உறுப்புரிமையை மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டுள்ளார். நேற்றுச் சனிக்கிழமை அவரது மகன் நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றிருந்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் பல மூத்த உறுப்பினர்கள் 45 பேர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் மேலும் பலர் உறுப்புரிமையை பெறுவார்கள் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெதுஜன பெரமுனவின் மெட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச அணி நாற்பத்தொன்பது இலட்சத்து 94 ஆயிரத்து 962 வாக்குகளைப் பெற்று 249 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலேயே மஹிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போட்டிவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனயை சிறிய கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பொறுப்பை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்வார் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச அணி நாற்பத்து ஒன்பது இலட்சத்து 94 ஆயிரத்து 962 வாக்குகளைப் பெற்று 249 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதே மாதம் அதே திகதியில் 2016 ஆம் ஆண்டு பசில் ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

மொத்தம் 341 சபைகளில் 249 சபைகளைக் கைப்பற்றி மூவாயித்து 386 உறுப்பினர்களையும் பொதுஜன பெரமுன பெற்றிருந்தது.

ஆனால் மைத்திரிபால சிறிசிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதின்நான்கு இலட்சத்து 87 ஆயிரத்து 960 வாக்குகளைப் பெற்று பதினொரு சபைகளை மாத்திரமே பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி முப்பத்தி ஆறு இலட்சத்து 25 ஆயிரத்தி 510 வாக்குகளைப் பெற்று இரண்டாயிரத்து 93 உறுப்பினர்களோடு 41 சபைகளை கைப்பற்றியிருந்தது.

ஆகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையப் பெற்று அந்தக் கட்சியை முன்னிலைப்படுத்த மஹிந்த ராஜபக்ச முற்படுகின்றாரா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரா் பசில் ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதே மாதம் அதே திகதியில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் இருப்­ப­வர்கள் உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் இடம்பெற்ற நிழக்வு ஒன்றில் அழைப்பு விடுத்திருந்தார்.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் மஹிந்தவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.