இலங்கை அரசியல் நெருக்கடியில் மற்றுமொரு குழறுபடி

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்ய சதி? தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் பொறுப்புகள்

ஜனாதிபதி மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் மஹிந்த தேசப்பிரிய என்றும் சந்தேகம்
பதிப்பு: 2018 நவ. 11 23:55
புதுப்பிப்பு: நவ. 12 12:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொறுப்புகள் அனைத்தையும் இலங்கைத் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேராவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ரெலிகிராவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என சகல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர். நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவு மஹிந்த தேசப்பிரியவும் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரிய, நளின் அபயசேகர ஆகிய இருவரும் ஆணைக்குழுவின் அதிாரங்கள், செயற்பாடுகளை இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் கையளிப்பதற்கான அறிக்கையொன்றை தமது கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளனர்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகுமாறு நளின் அபயசேகரவிடம் மஹிந்த சேதப்பிரிய கேட்டுள்ளார். ஆனால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அவர் பதவி விலகியுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ரட்ணஜீவன் கூல் பதவி விலகினால், தேர்தல்கள் ஆணைக்குழு செயலிழந்து போகுமென கொழும்பு ரெலிகிராவ் கூறியுள்ளது.

அத்துடன் ஆணைக்குழுவைச் செயலிழக்கச் செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்குள் மஹிந்த தேசப்பிரிய வந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் கொழும்பு ரெலிகிராவ் எழுப்பியுள்ளது.

பதவி விலகிலினால் தேர்தல்கள் ஆணைக்குழு செயழிலந்து இலங்கையின் தேர்தல் செயற்பாடுகள் மீண்டும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடமே கையளிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றும் கொழும்பு ரெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தச் சட்டத்தை வெளிப்படையாகவே மீறி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்படும் என்றும் பொறுமையாக இருக்குமாறும் மஹிந்த தேசப்பிரிய நேற்று சனிக்கிழமை அரசியல் கட்சிகளிடம் கூறியிருந்தார்.

ஆனால் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோராமலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள், நடவடிக்கைகள் அனைத்தையும் இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.

இது மற்றுமொரு சதி நடவடிக்கையென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.