இலங்கை ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடு குறித்த

அமெரிக்காவின் கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

ருவிட்டர் தளத்தில் கருத்துப் பதிவு
பதிப்பு: 2018 நவ. 12 12:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 12:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை அமெரிக்கா கண்டித்ததனை இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார்.
 
"பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு வருடத்துக்கு முன்னரே தேர்தலை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட தேர்தலுக்கு இடமளிக்காது பாராளுமன்றத்தை மூடியமைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது" என சுப்ரமணியன் சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.