நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்

அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

தேர்தலை நடத்துவது குறித்த நீதிமன்ற தீர்மானம் நாளை
பதிப்பு: 2018 நவ. 12 22:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 22:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இலங்கை ஒற்றையாட்சி உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
அதனடிப்படையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16 ஆவது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும்.

அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.