வடமாகாணத்தின்

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தம்

இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்
பதிப்பு: 2018 நவ. 13 11:30
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 13 11:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணி நேற்று திங்கட்கிழமை முதல் மீணடும் எவ்வித முன்னறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104 ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டிய அகழ்வு நடவடிக்கை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இடம்பெறவில்லை. எதிர்வரும் இரு வாரங்களுக்கு அகழ்வு நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
 
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி தொடர்சியாக மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது.

இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது 232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் முன் அறிவித்தல் இன்றி நேற்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திடீர் என அகழ்வு இடை நிறுத்தப்பட்டுள்ளது.