உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் கூடிய

இலங்கை நாடாளுமன்றம் நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றப் பகுதியில் பெரும் பரபரப்பு - விசேட அதிரடிப்படையினர் களத்தில்
பதிப்பு: 2018 நவ. 14 10:47
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 12:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்றம் அங்கு நிலவிய அமைதியின்மையை அடுத்து சபாநாயகர் கருஜயசூரியவினால் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித்பெரேரா லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரும் இதனை உறுதிசெய்துள்ளனர்
 
நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மைத்திபால சிறிசேன நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்த சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், நாளை கூடும் நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனர்.