இலங்கை அரசியல் நெருக்கடியின் இரண்டாம் பாகம்

நாடாளுமன்றத்தில் வாய்த்தர்க்கம், கைகலப்பு - உறுப்பினர்கள் சிலருக்கு காயம், தானே பிரதமர் என்கிறார் மகிந்த

பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறும் அழைப்பு - வெளிநாடுகள் மீதும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 நவ. 15 11:19
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 15 12:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அடிதடி மோதலையடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவை சுற்றிவளைத்த மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். கைகலப்பும் ஏற்பட்டதால் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடியதும் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஏற்க முடியது என்று கூறிவிட்டார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் அதனையும் மீறி மகிந்த ராஜபக்ச பிரதமர் ஆசனத்தில் இருந்தவாறு சிறப்புரையாற்றினார். அந்த உரையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்தது.
 
மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் மீண்டும் இன்று மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரிய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த மகிந்த தரப்பு உறுப்பினர்கள் பெரும் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். சபை நடுவாக நடந்து வந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் நாடாளுமன்றம் யுத்தகளமாக மாறியதாக செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் தனது ஆசனத்தில் இருந்த மகிந்த ராஜபக்ச சபாநாயகரைப் பார்த்து ஏசியவாறு எழுந்து சபையை விட்டு வெளியே சென்றார். அதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேறினார்.

அதற்கிடையே மஹிந்த தரப்பு உறுப்பினர் ஒருவர் சபாநாகயரின் ஆசனத்தில் தண்ணீரை ஊற்றியதுடன் அவரை நோக்கி காகிதங்களால் வீசினர். அதனையடுத்து சபாநாயகரும் வெளியேறிச் சென்றார். இந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் சம்பந்தன் அதற்கு பதலளிக்காது அங்கிருந்து நழுவினார்.

இதேவேளை, வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மீது மகிந்த ராஜபக்ச தனது விசேட உரையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

அரசியல் யாப்புக்கு அமைவாகவே பிரதமர் பதவியை ஏற்றுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெளிநாட்டுச் சக்தியின் உதவியோடு கொலைச் சதிபுரிந்தமையினால் பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் மகிந்த தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகவியலாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.