வடமாகாணத்தின்

கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு தொழில்சார் நெருக்கடி

வெளிமாவட்ட மீனவர்களால் தாம் நெருக்கடிக்கு உள்ளாவதாக விசனம்
பதிப்பு: 2018 நவ. 17 13:51
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 17 13:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் கடற்தொழில்களில் ஈடுபட்டு வரும் 3 ஆயிரத்து 389 வரையான மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 70 வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள குடும்பங்களில் 4 ஆயிரத்து 205 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
 
இதில் தற்போது கரைச்சி கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளில் 3 ஆயிரத்து 389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை, வெளிச்ச வீடுகள் இன்மை என்பன காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.