மகிந்த ராஜபக்ச பிரதமராக இருக்க முடியாது

ஐ.தே.க தாக்கல் செய்த மனு தொடர்பில் 30 ஆம் திகதி விசாரணை - கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

போர்க்காலத்தில் வழங்கிய ஆதரவைத் தருமாறு மக்களிடம் கோருகின்றார் மகிந்த
பதிப்பு: 2018 நவ. 26 13:59
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 26 14:26
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை எனத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் 30 மற்றும் 3 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருக்க முடியாதெனக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதாக மகிந்த ராஜபக்ச கூறிள்ளார். பதவியேற்பதை தாமதப்படுத்தியிருந்தால் இலங்கை பிளவுபட்டிருக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் வழங்கிய ஆதரவை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.

இந்த நிலையில் மகிந்த பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிரான மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 30 மற்றும் 3 ஆம் திகதிகளி்ல் விசாரணைக்கு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.