தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த

மாவீரர் நாள் இன்று - தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளும் அஞ்சலிக்குத் தயார்

தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிப்பு
பதிப்பு: 2018 நவ. 27 09:48
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 10:14
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களது நினைவு நாள் இன்று கார்திகை 27 ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் அனுட்டிக்கப்படுகின்றது. தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள், அஞ்சலிக்காக தயாராகியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உணர்வுபூர்வமாக காட்சியளிக்கின்றன. அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.
 
தமிழ் மக்களது விடுதலைக்காக தமது ஆசைகளைத் துறந்து விடுதலை ஒன்றே நோக்கு என்ற சிந்தனையை மனதிற்கொண்டு களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூர்வதற்கு கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாவீரர்களது வித்துடல்கள் புதைக்கப்பட்டிருந்த துயிலுமில்லங்கள் இடித்தொழிக்கப்பட்டு அவை இருந்த இடம்தெரியாமல் சிதைக்கப்பட்டன.

எனினும் தமிழ் மக்கள் பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து தற்போது அதிகார மோகத்தினால் பிளவுபட்டுள்ள மைத்திரி - ரணில் அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் இதற்கான தடைகள் முன்னரை விட ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.

இந்தசூழ்நிலையில் தற்போது தமது உறவுகளை நினைவுகூர்ந்து கார்த்திகை 27 ஆம் நாளாகிய இன்று தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்த தயாராகியுள்ளனர்.