ஜனநாயகத்தை அவமதித்துவரும்

மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாடம் புகட்டும் - இரா.சம்பந்தன்

ஐ.நா உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்
பதிப்பு: 2018 நவ. 28 08:50
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 08:53
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி - மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டுமெனவும், இதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து, நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து கொழும்பு வந்திருப்பதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மற்றும் இதர அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ள அவர் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்தும் அரசியல் பதற்ற நிலையை தணிப்பது பற்றியும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நேபாளம் ,ஜப்பான் குரோஷியா ,அர்மேனியா உட்பட்ட நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்பதவிகளை வகித்த இவர் அரசியல் நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இலங்கை விடயத்தை நேரடியாகவே கையாள ஐ நா பொதுச் செயலாளரால் அனுப்பப்பட்டிருக்கக் கூடுமென பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்...

ஐ நா வே நேரடியாக தலையிட்டிருப்பதால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.