இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு விதிகளை மீறும் சிங்கள அரசியல் தலைவர்கள்

புதிய பிரதமரை நியமிக்க மைத்திரி முயற்சி- ஆனால் ஏற்க முடியாதென ஐக்கிய தேசியக் கூறுகின்றது

ரணில் தரப்பை சமாதானப்படுத்த முற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
பதிப்பு: 2018 டிச. 04 15:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 11:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். புதிய பிரதமரை நியமிக்கும் விவகாரத்திலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கியதேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி, ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரமே பிரதமராக நியமிக்க முடியும் என உறுதியாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவரை பிரதமராக நியமித்து ஐக்கியதேசிய முன்னணியின் ஆதரவையும் பெற ஜனாதிபதி மைத்திரி முற்படுகின்றார்.
 
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அல்லது மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரதமராக எவரை நியமித்தாலும் அதை ஏற்க முடியாதென ஐக்கிய தேசிய முன்னணி கூறியுள்ளது.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியதென மைத்தரி கூற முடியாது எனவும் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளு்க்காக இலங்கை அரசியலமைப்பில் உள்ள வதிமுறைகளை மாற்ற முடியாதெனவம் ஐக்கிய தேசிய முன்னணி கூறியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் குழப்பங்கள், முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன.

நாளை புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்க வேண்டும்.

இல்லையேல் ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்தின் பிரகாரம் நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்படலாம் என இலங்கைச் சபாநாயகர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவரில் ஒருவரைப் பிரதமராக நியமிக்க மைத்திரி ஆலோசித்து வருகின்றார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க தரப்பு புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் ஆதரிக்காது என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் பதவியேற்றாலும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கூறியுள்ளது.