இலங்கை அரசியல் நெருக்கடியில் மேலும் குழப்பங்கள்

நீதிமன்ற விசாரணை நடைபெறும்போது நாடாளுமன்ற அமர்வைக் கூட்ட முடியாது - மகிந்த தரப்பு சபாநாயகருக்கு கடிதம்

கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை - தொடர்ந்து புறக்கணிக்கப்போவதாகவும் அறிவிப்பு
பதிப்பு: 2018 டிச. 06 08:01
புதுப்பிப்பு: டிச. 06 22:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட முடியாது எனவும் அமைச்சரவையும் இயங்க முடியாதெனவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாடாளுமன்ற அமர்வை நடத்த முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதன்கிழமை கூடி ஆராய்ந்த பின்னர் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் நாடாளுமன்ற அமர்வை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்ற விவாதத்தின் போது கூறியுள்ளார்.

அத்துடன் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்சவும் கூறியுள்ளார். அது குறித்து உயர் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை எதிர் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என சபாநாயர் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 12 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அமைச்சரவை செயற்பட முடியாதெனவும் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்புத் தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியா தவறா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏழாம் திகதி வழங்கப்படவுள்ளது. ஆனாலும் இரண்டு தீர்ப்புகளும் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.