இலங்கை மலையகத்தில்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மீதும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 டிச. 06 17:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 21:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் பொருளாதாரத்தி்ல் பிரதான பங்களிப்புச் செய்யும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் கைகளில் ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனி முதலாளிமார், தற்போதைய பொருளாதாரச் சுமைகளைக் கருதி சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

இல்லையேல் தேயிலைக் கொழுந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து நிறுத்தப் போவதாகவும் தொழி்ற்சாலைகள் முற்றாக செயலிழக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு விவகாரத்தில் மலையகத் தமிழ் பிரதிநிதிகள் தொழிற்சங்கங்கள் அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.