இலங்கை அரசியல் நெருக்கடியினால் தொடரும் நீதிமன்ற விசாரணைகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை சனிக்கிழமை வரை நீடிப்பு

ஜனாதிபதி கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய முடியாது- சட்டமா அதிபர்
பதிப்பு: 2018 டிச. 06 23:03
புதுப்பிப்பு: டிச. 07 00:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை எதிர்வரும் எட்டாம் திகதி சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி ஆகிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீ;தான விசாரணை கடந்த மூன்று நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நாளை வெள்ளிக்கிழமை இறுதித் தீர்;ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னர் கூறியிருந்தனர்.
 
ஆனாலும் விசாரணை நீடித்துச் செல்வதால் எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போதும் இந்த மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது எனவும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

அதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமி்க்க வேண்டும் எனக் கோரும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவரும் நிலையில், 122 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்.