முடிவின்றித் தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

சர்வதேச நாடுகள் இலங்கை அரசியல் பிரதிநிதிகளுக்கு அழுத்தம்- இணக்கத்துக்கு வருமாறும் வலியுறுத்தல்

மாற்று நடவடிக்கைகளுக்கு தயார் என்று பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்
பதிப்பு: 2018 டிச. 08 11:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 12:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் 49 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் கொழும்பில் உள்ள அமைச்சுக்களின் அதிகாரபூர்வமான செயலாளர்களுடன் மாத்திரமே கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதனை அமெரிக்கா வரவேற்றுகும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் கடந்த வாரம் கூறியிருந்தார்.
 
மக்களால் பிரதிநிதிகள், அரசியலமைப்பின் படி செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அமெரிக்கத் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் அரசியல் நெருக்கடி குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தரீக் அகமட் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகத்தவர்கள். ஏனைய சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் பிரிட்டனின் அமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் மனித உரிமை நிலரவம் முக்கியமானதாகக் காணப்படும் முப்பது நாடுகள் தொடர்பான இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னரே அமைச்சர் தரீக் அகமட் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லாட்சி. ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாத்து அரசியல் யாப்பின் செயற்பட வேண்டும் என்பது குறித்து இலங்கையில் உள்ள சகல தரப்புக்கும் அறிவுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூடிய விரைவில் இலங்கை அரசியல் பிரதிநிதிகள் இணக்கத்துக்கு வர வேண்டும் என்றும் அமைச்சர் தரீக் அகமட் வற்புறுத்தியுள்ளார்.