சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு

கிளிநொச்சியில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

பல தசாப்தங்களாக நீதிக்காக போராடும் தமிழர்களுக்கு இதுவரை தீர்வில்லை
பதிப்பு: 2018 டிச. 09 12:55
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 13:01
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொழில் புரியும் இடங்களில் ஆண் பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இன்று காலை 9 மணிக்கு தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைகள் பெண்கள் மீதான வன்முறை வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி அவற்றுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஈழத்தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமக்கு மறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியாக நீதிக்காக போராடிவருகின்ற போதிலும் இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.