வடமாகாணத்தின்

முல்லைத்தீவில் கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம்

கட்டடத்தைப் பாதுகாக்கவே அடையாளப்படுத்துவதாக அதிகாரி ஒருவர் தகவல்
பதிப்பு: 2018 டிச. 09 20:32
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 09:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கு இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர் தாம் நினைத்தவாறு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்கள் குற்றம்சுமத்திவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்துள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை ஏன் என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தமிழர் பிரதேசங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ் மக்களது புர்வீக நிலங்கள் உட்பட பல பகுதிகள் இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கோட்டையைத் துப்பரவு செய்து அதனை அடையாளப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டடத்தை பாதுகாக்கும் நோக்கில் அதற்கான செயற்பாடுகளை தாம் முன்னெடுத்துள்ளதாக அங்கு நின்ற அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.