யாழ்ப்பாணத்தில்

கிராமசேவகர் இடமாற்றப்பட்டதைக் கண்டித்து புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கல் நடிவடிக்கை என மக்கள் விசனம்
பதிப்பு: 2018 டிச. 10 11:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 11:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அரசியல் நெருக்கடி தொடர்கின்ற நிலையில், அரசாங்க அதிகாரிகளது இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் –புன்னாலைக்கட்டுவன் (208) பகுதி கிராமசேவகர் இடமாற்றம் செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நவடிக்கை எனத் தெரிவித்து கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமசேவகருக்கு வழங்கப்பட்ட இமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலை 9 மணியவில் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் அலுவலகத்தின் முன்னால் ஒன்றுகூடிய கிராம மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
 
அரசியல் பழிவாங்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு தமது பிரதேசத்துக்கு அங்கு கடமையாற்றிய கிராம அலுவலரே மீள நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலரிடம் கையளித்ததுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரும் இதன்போது கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உட்பட தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் அண்மைக் காலங்களில் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெறுவதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமகன் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.