நீதிமன்ற விசாரணைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசியல் நெருக்கடி

ரணிலை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை- மகிந்த தரப்பு புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு

ஜே.பி.வி. மௌனம்- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதில் இல்லை
பதிப்பு: 2018 டிச. 11 23:30
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 12 07:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடுகின்றது. அத்துடன் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் சட்டத்திற்கு மாறானது எனக்குறிப்பிட்டு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தனர்.
 
இந்த நிலையில் நாளை சமர்ப்பிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்குமா இல்லையா என்பது குறித்து இதுவரை கருத்துக் கூறவில்லை.

மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயக விரோதமானது. ஆனால் ரணில் விக்கிரமசிங்வைத்தான் பிரதமராக மீண்டும் நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.ஒருபோதும் கூறாது என விஜித ஹேரத் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படையாகக் கூறவில்லை ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கப்படும் என தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்தவை நீ்க்கி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றக் கட்டடத்தில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு ஏற்ப சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வைக் கூட்ட வேண்டும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாதென மகிந்த தரப்பு உறுப்பினர் டிலான் பெரரா கூறுகின்றார்.