கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு

மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்

இம்முறை அதிகளவான மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக அறிவிப்பு
பதிப்பு: 2018 டிச. 31 09:59
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 31 10:04
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#HigherEducation
#UniversityGrantsCommission
இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
 
இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் அவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்தக் கையேட்டை உரிய முறையில் விளங்கிக்கொண்டு தாம் விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில மாணவர்கள் இரண்டு அல்லது 3 கற்கைநெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிப்பதனால் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கைநெறி இல்லாமல் போகின்றது. ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் பின்னர் அந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதுடன் புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.