வடமாகாணத்தின்

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானது - விசாரணையில் தகவல்

படகிலிருந்து கைத்தொலைபேசிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் மீட்பு
பதிப்பு: 2019 ஜன. 01 20:21
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 20:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Boat
#Fishermen
#India
முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு கடற்கரையில் சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குச் சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
கரையொதுங்கிய படகிலிருந்து கைத்தொலைபேசிகள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் படகானது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை விபத்துக்குள்ளாகியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.