வடமாகாணத்தின்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டுக்குழுவினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏழு மோட்டார் சைக்கிள்களும் மீட்பு
பதிப்பு: 2019 ஜன. 01 21:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 21:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Kokkuvil
#Sword
#Police
#Srilanka
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதற்கான முயற்சிகளும் தொடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கொக்குவில் - காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்த குழுவொன்றை அப்பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து, வருட ஆரம்ப நாளான இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மடக்கிப் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கொக்குவில் பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் சுமார் 20க்கும் மேற்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் 40க்கும் மேற்பட்டோர் வாள்களுடன் வந்துள்ளனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய அப்பகுதி பொதுமக்கள், தாக்குதல் நடத்த வந்த குழுவை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அதன்போது வாள்வெட்டுக் குழுவினர் தப்பிச்செல்ல முயன்றபோது தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடியவர்களில் நால்வரைப் பொதுமக்கள் ஒன்றிணைந்து மடக்கிப் பிடித்ததுடன், குறித்த நால்வரையும் மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், தப்பிச் சென்றவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூர்மை செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினர்.