வடமாகாணத்தில்

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இழப்பீடு வழங்கிவைப்பு - சபாநாயகர் வடக்குக்கு விஜயம்

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கிளிநொச்சிக்கு விஜயம்
பதிப்பு: 2019 ஜன. 03 19:32
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 03 19:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Mullaituvu
#Flood
வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களிலிருந்து தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பத்தாயிரம் ரூபா இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்ததாக முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவளை இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று காலை கண்டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.

அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்டாவளை மகாவித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் அது தொடர்பான நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.