இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து

அரசியலில் தொடர் மாற்றம் - மாகாணங்களுக்கான ஆளுநர்கள் புதிதாக நியமனம்

வடக்கு மாகாணத்துக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை
பதிப்பு: 2019 ஜன. 05 09:27
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 09:33
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#PoliticalCrisis
#Governer
#Political
இலங்கையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சுமத்திவரும் நிலையில் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர் மாற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
 
மாகாண ஆளுநர்கள் அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன கடந்த 31ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கமைய மறுநாள் ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அதன் பிரகாரம் புதிய ஆளுநர்கள் நியமனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது 9 மாகாணங்களில் 5 மாகாணங்களது ஆளுநர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கையளித்துள்ளார்.

அதனடிப்படையில் மேல்மாகாண ஆளுநராக இருந்த ஹேமகுமார நாணயக்காரவுக்கு பதிலா அஸாத் சாலியும் மத்திய மாகாண ஆளுநராக இருந்த பீ.பி.திஸாநாயக்கவுக்கு பதிலாக மைத்திரி குணரத்னவும் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த றோஹித்த போகொல்லாகமவுக்கு பதிலாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வட மத்திய மாகாண ஆளுநராக இருந்த எம்.பி.ஜயசிங்கவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்கவும் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த கே.சீ. லாகேஸ்வரனுக்கு பதிலாக பேஷல ஜயரத்ன பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஏனைய மாகாணங்களான தென், வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என இலங்கை ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.