வடமாகாணத்தின்

யாழ்ப்பாணத்தில் அரச, தனியார் பேருந்து சாரதி நடத்துனர் மோதல் - அரச பேருந்து சாரதி வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு பேருந்துகளுக்கும் இடையேயான போட்டியே காரணம் என பயணிகள் விசனம்
பதிப்பு: 2019 ஜன. 08 15:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 08 15:17
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#PrivateBus
#SLTB
#Fight
இலங்கையில் சேவையில் ஈடுபட்டுவரும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையேயான முறுகல் சற்றுத் தணிந்திருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதனால் குறித்த சாரதி காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆலடி சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 அளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாண செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
 
வசாவிளான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை பின்னால் வந்த தனியார் பேருந்து ஆலடி சந்தியில் முந்திச் சென்று வழமறித்ததுடன், தனியார் பேருந்து நடத்துனர் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருந்துகளும் போட்டியாக வேகமாக பயணிதடததாகவும், அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து சாரதி தாக்கப்பட்டார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்ததாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.

பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.