இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடியால் தாமதமான

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி - மொத்த மதிப்பீட்டு செலவு 4770 பில்லியன்

இலங்கை நிதியமைச்சு தகவல்
பதிப்பு: 2019 ஜன. 08 15:30
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 08 15:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Parliament
#Budget
#FinanceMinister
இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக தாமதமான நடப்பாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு நான்காயிரத்து 770 பில்லியன் ரூபா என்று இலங்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 4.8 வீதமாக அமையவுள்ளதாகவும் இந்த வருடத்தில் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீதமாக அதிகரிப்படும் எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே ஏற்பட்டுள்ள கடன்களை செலுத்துவதற்காக இவ் வருடம் வரவு செலவுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்றில் அரசாங்கத்தினால் கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாரிய தொகை இதுவென நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.