தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்று அஞ்சலி
பதிப்பு: 2019 ஜன. 10 12:14
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 13:52
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Massacre
#Tamils
#Srilanka
#Police
ஈழத்தமிழ் மக்களை மக்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் இலங்கை அரச படையினராலும் சிங்கள அரச கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட படுகொலைகளில் ஒன்றான உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது.
 
வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலங்கம் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.

1974 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதத்தின் போது இலங்கைப் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்போது அங்கு மாநாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் எவ்.எக்ஸ்.குலநாயகம், வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் உட்பட பலர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.