இலங்கையில்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு - தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இல்லை
பதிப்பு: 2019 ஜன. 10 14:30
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 14:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இதுவரை சரியாக வெளியிடப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என ஆயிரத்து 299 பேர் உள்ளதாக இலங்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குவதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 426 ஆண் கைதிகளும் 50 பெண் கைதிகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான விசாரணையை நடத்தி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய போதும் இதுவரை எவ்வித தீர்வும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.