தமிழர் தாயகத்தில்

தடையையும் மீறி சட்டவிரோத மீன்பிடி முறையைப் பயன்படுத்தி கடற்தொழில் மேற்கொள்ளப்படுகின்றது - ஆலம் குற்றச்சாட்டு

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் ஆராய்வு
பதிப்பு: 2019 ஜன. 11 11:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 11 12:02
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Mullaituvu
#Jaffna
#Mannar
#Vavuniya
#IllegalFishing
தமிழர் தாயகத்தின் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் தற்போதும் தமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவர் இணைய தலைவர் என்.எம்.ஆலம் விசனம் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த 1 வருடத்துக்கு முன்னர் சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் ஆகியவற்றுக்கு தடைச் சட்டங்கள் ஏற்படுத்தப்ட்ட போதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தற்போதும் வடமாகாணத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, சிலிண்டர் தொழில், மின் பாய்ச்சி மீன்பிடித்தல் உட்பபட்ட சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பபட்டுவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
 
வடமாகாண மீன்பிடி இணையத்தின் ஒன்றுகூடல் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3. 30 அளவில் யாழ்ப்பாணம் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் மாகாண மீனவர் இணைய தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முல்லைத்தீவு, மன்னார், பள்ளிக்குடா பூநகரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் இந்த செயற்பாடு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட நான்கு மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து தீர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக இணைய முகாமைத்துவ செயலணி ஒன்றினூடாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் அழைத்து தீர்க்க முயற்சிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார, சிறப்பு விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ்ப்பாண தலைவர் இ.முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.