இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை உறுதிப்படுத்தும் கோஷங்கள்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வரைபை நடைமுறைப்படுத்தவும்- பேராசிரியர் திஸ்ஸவிதாரன

தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகள் தூண்டப்படுகின்றன- விக்கிரமபாகு கருணாரட்ன
பதிப்பு: 2019 ஜன. 16 09:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 16 10:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய சர்வகட்சிக்குழுவினால் தாயரிக்கப்பட்டிருந்த தீர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான தேவை எழுந்திருக்காது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச தரப்பின் ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் திஸ்ஸவிதாரன, அதற்கு ஆதரவு வழங்க முடியாதெனக் கூறியுள்ளார்.
 
அதேவேளை, தமிழ் மக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

மகிந்த ரரஜபக்ச தரப்பு, ஜே.பி.வி. மற்றும் பௌத்த சிங்கள அமைப்புகள், சிங்கள ஊடகங்களில் புதிய யாப்பு இலங்கையைப் பிளவு படுத்தப்போவதாகக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்வதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்ளின் வாக்குகளைப் பெறும் நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இலங்கையைப் பிளவுபடுத்தும் புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் புதிய அரசியல் யாப்பை ஏற்கவில்லை எனவும் டிலான் பெரேரா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது எனவும் சமஸ்டி ஆட்சி கிடைக்கும் எனவும் கூறி தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றார். ஆனால் எதுவுமே சாத்தியப்படாது என ரணில் விக்கிரமசிங்கவுக்கே புரியும். அத்தோடு ஜே.வி.பி கூட ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் டிலான் பெரரா கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு கட்சிகளும் ஏனைய தமிழ் கட்சிகளும் பொது அமைப்ப்புக்களின் பிரதிநிதிகளும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈழத் தமிழர்களின் இறைமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி ஆகியவற்றை புதிய அரசியல் யாப்பு உறுதிப்படுத்தவில்லையென முன்னாள் முதலமைச்சா் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பல தமிழ் பிரமுகர்களும் கூறியுள்ளனர்.

அதேவேளை, மகிந்த ரரஜபக்ச தரப்பு, ஜே.பி.வி. மற்றும் பௌத்த சிங்கள அமைப்புகள், சிங்கள ஊடகங்களில் புதிய யாப்பு இலங்கையைப் பிளவு படுத்தப்போவதாகக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்வதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.