வடமாகாணத்தின்

வவுனியா - நொச்சிகுளத்தில் உள்ள பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் - மாணவி வைத்தியசாலையில் அனுமதி

இதுவரை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜன. 18 09:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 18 09:56
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#School
#Student
#Attack
வவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி மீது அதே பாடசாலையின் அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயங்களுக்குள்ளான மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். நேற்று முன்தினம் 16 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும் குறித்த பாடசாலை அதிபரின் மீது எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை,

வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தைக் காணவில்லை எனத் தெரிவித்து தனது பிள்ளை மீது அதிபர் தனது அறையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதுவரை ஓமந்தை பொலிஸார் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தனது பிள்ளைக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள தனது மகளுக்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.