கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் தொடர்மழை- நெல் வயல்கள் நீரில் ழுழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் கவலை

நஷ்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை
பதிப்பு: 2019 பெப். 11 06:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 11 15:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் அதிகளவு நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள முற்பகுதியிலே கனழமை பெய்ததனால் அறுவடை செய்த நெல் விற்க முடியாமலும், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் அறக்கொட்டித்தாக்கத்திலிருந்து மிஞ்சிய வேளாண்மையை அறுவடை செய்யும் வேலையில் கனமழை பெய்து அழித்திவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
 
இவ்வாறு பாதிகக்கப்பட்டுள்ள தமக்கு இலங்கை அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட விவசயாகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை, கடும் மழையினால் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், இதுவரை எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பான மதிப்பீடுகள் கிடைக்கவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவித்தி உதவி ஆணையார் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றிய மதிப்பீடுகள் கிடைத்ததும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கமநல அபிவித்தி உதவி ஆணையார் அலுவலகம் கூறியுள்ளது.