இலங்கை ஒற்றையாட்சியில்

புதிய அரசியல் யாப்புகான வரைபில் மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிாரங்கள் இல்லை- அமைச்சர் லக்ஸ்மன்

ஒற்றையாட்சிப் பண்பும் மாறவில்லை என்கிறார்
பதிப்பு: 2019 பெப். 11 11:27
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 11 11:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கான வரைபில் மாகாணங்கள் இணைக்கப்படுதல், மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்கள் எதுவும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியயெல்ல கன்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியுள்ளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பௌத்த குருமார் அதிகளவில் கலந்துகொண்டனர். அங்கு புதிய அரசியல் யாப்புக்கான வரைபு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் திருத்தங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
 
அந்த உத்தேச அரசியல் யாப்புத் திருத்தங்களில் மாகாணங்களுக்கு சம அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. ஒற்றையாட்சிப் பண்பு மாறவில்லை என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

மாகாண சபைகளை பலப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம். இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு ஏற்ற முறையில் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு காணி, பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சி பொய்ப் பிரச்சாரங்களை செய்வதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்துக்கான கௌரவம, அந்தஸ்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கரியயெல்ல உறுதியளித்தார்.

அதேவேளை, ஒற்றையாட்சி முறை மாற்றப்பட்டு ஒருமித்த நாடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டிப் பண்பு அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறி வருகின்றார்.

ஆனால் புதிய அரசியல் யாப்புக்கான வரைபில் ஒற்றையாட்சிக் கோட்பாடு மாறவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.