2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான நிலையில்

பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜெனீவாவுக்கு விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்- மீண்டும் வாக்குறுதி

நடந்தது தமிழ் இனப்படுகொலை என்பதை சர்வதேசத்துக்கு நிரூப்பிக்க வேண்டும் என்கிறார் விக்கி
பதிப்பு: 2019 பெப். 12 23:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 12 23:51
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பு இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி (Mona Rishmawi) மற்றும் உயர் அதிகாரிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
 
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் அமைச்சர் தலதா அத்துகோரள உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, மனித உரிமை விவகாரங்களிலும் பொறுப்புக் கூறும் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி அமைச்சர் தலதா அத்துகோரளயிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இருவரும் சந்தித்துப் பேசிய விடயங்கள் எதுவும் முழுமையாக ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

அதேவேளை, வெளியுறவு அமைச்சர் திலக்மரப்பன அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவென்று விரைவில் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ஜெனீவா மனித உரிமைச் செயற்பாடுகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லையென முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

நடந்தது தமிழ் இனப்படுகொலைதான் என்று சர்வதேசத்துக்கு நிரூப்பிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.