தடைகளையும் தாண்டி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கும் பணி நிறைவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புதிய தூபியில் அனுட்டிக்க தீர்மானம்
பதிப்பு: 2019 பெப். 13 08:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 13 08:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#UniversityofJaffna
#MullivaikalMemorial
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரின் போது அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அமைப்புப் பணி இறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
 
ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஆரம்ப கட்ட வேலையுடன் அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த தூபியை பல்கலைக்கழக மாணவர்கள் முழுமைப்படுத்தியுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.