ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர்

ரணிலின் இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் மனு - மே மாதம் அறிவிப்பு வெளியாகும்

ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 பெப். 26 22:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 27 10:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#PrimeMinister
#Ranilwickramasinghe
#Political
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கேள்விக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட உரிமை வினா பேராணை (Writ of quowarranto) தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது குறித்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய இரண்டு நீதிபதிகள் இந்த அறிவிப்பை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி, பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் பிரின்ட்டர்ஸ் அன்ட் பப்ளிஷஸ் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.
 
இவ்வாறு இலாபம் ஈட்டும் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டு உரிமை வினா பேராணை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.

நீதிக்கான பெண்கள் அமைப்பின் இணைத் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான ஷர்மிளா கோனவல இந்த மனுவைக் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செயயப்பட்டதன் பின்னணியில் கொழும்பில் மூன்று மொழிகளிலும் இயங்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக குறித்த தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் செயற்படுவதாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைமை பதவியில் இருந்தும் விலக்குவதே இந்த மனுவின் நோக்கம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

குறித்த உரிமை வினா பேராணை (Writ of quowarranto) செல்லுபடியற்றது என்றும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்கும் எனவும் கட்சியின் மூத்த உறுப்பினரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டார்.