வடமாகாணத்தில்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை
பதிப்பு: 2019 பெப். 27 14:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 27 14:13
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Teachers
#Protest
#TeachersUnion
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர். ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண கிளையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆசிரியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.
 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச்செய், இல்லாமல் செய்த ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் வழங்கு ஆகிய கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் ஆசிரியர் சங்க தலைவர் மகிந்த ஜெயசிங்க உள்ளிட்ட சங்கத்தின் அதிபர்கள் மற்றும் ஆசியரியர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதேவேளை இக் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.