வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில்

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் நோக்கிலான வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது

இன்று பூநகரி ஊடாக மன்னார் நோக்கிப் பயணம்
பதிப்பு: 2019 பெப். 28 07:50
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 07:56
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Keppapulavu
#LandProtest
#Jaffna
#SignatureCompain
#SrilankaMilitary
இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழ் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அலட்டிக்கொள்ளாத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு நோக்கிய வாகனப் பேரணி நேற்றுப் புதன்னிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.
 
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் என்ற பெயரில் இந்த வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் காணிகளை மீட்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் இருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி, நேற்றுப் புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததுடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்தன் ஊடாக கிளிநொச்சியை அடைந்து அங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது. இன்று பூநகரி ஊடாக மன்னார், வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

ஊர்வலம் எதிர்வரும் இரண்டாம் திகதி கொழும்பைச் சென்றடைந்ததும் இலங்கை ஜனாதிபதி செலயக முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.