இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழு பார்வை - பாதுகாப்புக் குறித்து உரையாடல்

இரு நாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பேசப்பட்டது
பதிப்பு: 2019 பெப். 28 14:48
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 20:47
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Hambantota
#HambantotaHarbor
#China
#America
சீன அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனாவின் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை அம்பாந்தோட்டைக்குச் சென்ற இந்தக் குழு துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டதாக அமெரிக்கத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன. அம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி அசோக விஜேசிறிவர்த்தனவையும் சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க, இலங்கை ஆகிய இரு நாடுகளின் கடற்படைச் செயற்பாடுகள், கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான ஒத்துழைப்புகள், முக்கியத்துவங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்தபோது கூறியிருந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் குழு ஒன்று நேற்று புதன்கிழமை அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஜெயந்த சில்வா, அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் ஹெஸ் ஆகியோரும் அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவுடன் சந்தித்து உரையாடியுள்ளனர்.