வடமாகாணத்தின்

முல்லைத்தீவில் திடீர் சுற்றிவளைப்பு - சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றோர் மீது அண்மையில் தாக்குதல்
பதிப்பு: 2019 பெப். 28 21:36
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 21:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#IllegalFishering
#Fishermen
#Attack
முல்லைத்தீவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தல் நடவடிக்கைக்காக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூர்மை இணையத்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
 
தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள், மடுக்கந்தை விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி அமுனுபுரவின் நெறிப்படுத்தலில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்ததாக கூர்மையின் முல்லைத்தீவு செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக விசனம் வெளியிட்டுவரும் நிலையில், நந்திக்கடல் நீரேரியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.