வடமாகாணத்தின்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மகன் தொடர்பாக தகவலறிந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு தந்தை கோரிக்கை
பதிப்பு: 2019 மார்ச் 01 22:28
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 03 08:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Uttuppulam
#Missing
#Children
#NothernProvince
#Srilanka
தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்துச் சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் தந்தை கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மகன் தொடர்பாக தகவலறிந்தால் 0779240145 தன்னுடைய தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.