இலங்கையில்

நிவாரணம் வழங்க காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு- அலுவலகமே வேண்டாமென்கின்றனர் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்குமா என சந்தேகம்?
பதிப்பு: 2019 மார்ச் 04 22:14
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 22:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#OMP
#MissingPersons
#SaliyaPieris
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் பரிந்துரை விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
காணாமல் ஆக்கப்படல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் மாத்தறை மாவட்ட பிராந்திய அலுவலகத்த‍தை் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக கூர்மையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் OMP எனப்படும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கண்டனப் போராட்டத்தின் போது கூட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து பாரிய களேபரம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ள இந்தக் கருத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.