ஜெனீவா மனித உரிமைச் சபையின்

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை அனுமதியோம் - இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் லக்ஸ்மன்

இலங்கை குறித்த பிரேரணையில் திருத்தங்கள் செய்ய பேச்சு என்றும் கூறுகின்றார்
பதிப்பு: 2019 மார்ச் 09 00:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 22:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Warcrime
#Lakshman
#Kiriella
#SLparliament
போர்க்ககுற்ற விசாரணைகளை நடத்த சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விசாரணைக்கு இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறை பொருத்தமானது எனறும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தப் பிரேரணையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என மனித உரிமைச் சபையிடம் அரசாங்கம் கோரியுள்ளது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
 
வெள்ளிக்கிழமை காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியது. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர். தயாசிறி ஜயசேகர ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையுடன் சர்வதேச நாடுகள் சிறந்த உறவைப் பேணுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் பிடியில் இருந்து இலங்கை விலக வேண்டும் என மகிந்த தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.