யாழ்ப்பாணத்தில்

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் உண்ணாவிரதம்- தொடர்ந்து போராடவுள்ளதாகவும் எச்சரிக்கை

24 மணி நேரமும் வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தல்
பதிப்பு: 2019 மார்ச் 11 07:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 11 10:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Pointpedro
#HungerStrike
#Maruthankerny
தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதங்கேணி வைத்தியசாலையில் இருபத்து நான்கு மணி நேரமும் வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீரப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்தன் என்பவரால் மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழைமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
இதன்போது மருதங்கேணி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் எங்கே?, மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை சீராக இயக்குக, நோயாளர் காவுவண்டிக்கு சாரதி இருக்கிறார் நோயாளர் காவுவண்டி இல்லை என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.

இக் கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.