இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் நடவடிக்கை

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறும் நிலையில் இலங்கைப் படையினர் மீது விசாரணை

ஆனால் கைதுசெய்ய வேண்டாமென இலங்கை உயர் நீதிமன்றம் தடையுத்தரவு
பதிப்பு: 2019 மார்ச் 11 23:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 22:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Genevasession
#Srilanka
#Military
#Warcrime
#Studentsmurder
#Colombo
ஜெனீவா மனித உரிமைச் சபையின் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கைப் படையினர் மீதான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்றது. ஆனாலும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைதுசெய்ய வேண்டாம் என இலங்கை உயர் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் விசாரணைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. இதனால் இன்று திங்கட்கிழமை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் எட்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது. கொழும்பில் பதினொரு இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவே அட்மிரல் கரன்னகொடவிடம் விசாரணை இடம்பெற்றது.
 
கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விசாரணை இடம்பெற்றது.

விசாரணை இன்று நிறைவு பெறவில்லை என்பதால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி புதன்கிழமையும் விசாரணை இடம்பெறும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாணவர்களைக் கடத்திச் சென்று அவர்களது பெற்றோரிடம் கப்பம் பெற்றார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாணவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் முறையிட்டிருந்தனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஆண்டு பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.