கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த

யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் எழுச்சிப் பேரணி - தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி ஆரம்பம்

ஊர்திப் பவனி வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் என அறிவிப்பு
பதிப்பு: 2019 மார்ச் 13 07:02
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 07:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Tamilgenocide
#UOJ
#UniversityofJaffna
#Geneva
#Srilanka
இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழின அழிப்புக்கு சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ் காத்திருக்கின்ற போதும் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறான நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் தமிழர் விடுதலைப்போராட்டத்துக்கு வலுச்சேர்த்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பாக தாயக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆதரவைத் திரட்டும் நோக்கிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

இந்த ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணித்து மீண்டும் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.